மலையகம் சம்பந்தமாக ஆணைக்குழு ஒன்று அமைக்க வேண்டும்

” மலையக தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும். இது விடயம் சம்பந்தமாக ஆணைக்குழுவொன்று நிறுவப்பட்டு அக்குழுவால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்வு அவசியம்.” – என்று இ.தொ.காவின் பிரதித் தலைவரும், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கணகராஜ் தெரிவித்தார்.

அட்டனில் இன்று (23.12.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.