சென்னை அயலக தமிழர் விழாவில் மனோ பங்கேற்பு !

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், ஜனவரி 11, 12 ஆகிய தினங்களில் தமிழக அரசு சென்னையில் நடத்தும் அயலக தமிழர் தின விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசனுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. “தாய் தமிழ்நாட்டில் பிரமாண்ட கொண்டாட்டம். அயலக தமிழர் தினம். உலகெங்கும் உள்ள சாதனை தமிழர்களுடன் கலை நிகழ்சிகள், உலக தமிழ் சங்கங்களுடன் கலந்துரையாடல், நலத்திட்டங்கள், சிறப்பு அமர்வுகள். சிறப்பு […]
இலங்கையில் மீண்டும் ஆட்டம் காணும் கொரோனா

இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்றுக்குள்ளாவோர் இனம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி நேற்றையதினம் புதிதாக நால்வர் கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் இனம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் நேற்றுடன் மட்டும் ஆறு இலட்சத்து 71 ஆயிரத்து 927 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பில் புதிய சாதனை படைத்த இளைஞன்! வைரலாகும் புகைப்படங்கள்!

மட்டக்களப்பு பழுகாமத்தை சேர்ந்த பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் 1299KM சைக்கிளில் பயணம் செய்து இலங்கை முழுவதையும் ஒன்பது நாட்களிலே தனியாக பயணம் செய்து வந்திருக்கின்றார். தனது பயணத்தை 2022 டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் ஆரம்பித்து 1299KM பயணம் செய்து மீண்டும் 2023 ஜனவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்த இடத்திலே தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். இவரது பயண விபரங்கள் இதோ,
மனைவியை விட்டுவிட்டு மாமியாருடன் தலைமறைவாகியுள்ள மருமகன்!

தனது மனைவியை விட்டுவிட்டு மனைவியின் தாயான மாமியாருடன் மருமகன் தலைமறைவாகியுள்ள சம்பவம் ஒன்று இந்த்தியாவில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருகையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் சண்முகம் என்பவர் தனது மூத்த மகள் பூர்ணாவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் நாளடைவில் சுமன் தனது மாமியின் கவர்ச்சியில் இழுக்கப்பட்ட நிலையில் மாமியாருடன் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகின்றது . நேற்று முந்தினம் மாமாவும் மருமகனும் மது அருந்தியதாகவும் இதனால் அதிக போதையில் மாமா […]
கட்டண உயர்வுக்கு எதிராக இன்று அரை மணிநேரம் நாடு இருளில் மூழ்கும்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்று (8) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: “தயவுசெய்து இதற்கு எதிராக மௌனப் போராட்டம் நடத்துங்கள். அரை மணி நேரம் விளக்குகளை அணைத்துவிட்டு நாங்கள் போராட்டம் நடத்தலாம்.” இதேவேளை, பௌர்ணமி தினமான நேற்று (06) மின்வெட்டுக்கு மகா சங்கரத்தினர் உள்ளிட்ட பல தரப்பினர் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்: கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை:

இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் பதுக்கிய 6 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர்பட்டிணம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா எண்ணெய், கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன், வாசனை திரவியங்களின் கூடிய நக பாலிஷ், சமையல் மஞ்சள், செருப்பு, கடல் அட்டைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக அடுத்தடுத்து அதிகளவு பிடிபட்டு வருகின்றன. இதை தொடர்ந்து மண்டபம் அருகே வேதாளை கடற்கரை […]
விடுதி அறையில் மர்மமாக இறந்த கிடந்த மாணவன்

ஹோமாகமை தியகம தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.